

‘தி இந்து’ குழுமம், நவராத்திரி பண்டிகையை தனது வாசகர்களோடு இணைந்து கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் கொலு போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான ‘கொலு கொண்டாட்டம் - 2021’ போட்டியில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி,மதுரை மாநகரப் பகுதிகளைச்சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்பவர்கள் தங்களதுஉருவமும் தெரிவதுபோல கொலுவைபுகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்.புகைப்படத்தின் அளவு 3MB-க்கு மிகாமல்இருக்க வேண்டும். அந்த புகைப்படங்களில் மங்கள்தீப் அகர்பத்தியின் பாக்கெட்டும் இடம்பெறுவதன்மூலம் உங்கள் வெற்றிக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
அழகியல் உணர்வோடு நீங்கள் வைத்துள்ள கொலுவுடன், சுவையான சுண்டலும் தயாராக உள்ளது. கிளிக் செய்து கொலுவை புகைப்படம் எடுங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தோ, நேரடியாகவோ https://bit.ly/KOLU21 என்ற இணையதளத்துக்கு சென்று புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். இதற்கான அவகாசம் இன்று (அக்டோபர் 10) நிறைவடைகிறது.
உங்களது கொலுவின் மையக் கருத்து, வைத்துள்ள விதம், கற்பனைத் திறன் அடிப்படையில் தகுதியான 25 பேரின் கொலு தேர்வுசெய்யப்படும். அந்த 25 பேரின்வீடுகளுக்கு எங்கள் நடுவர் குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டு, 3 வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள். உங்கள் மனம்கவர்ந்த பிரபலங்களும் உங்கள் வீட்டுக்குவரக்கூடும். இந்த வருகையின்போது கரோனா தடுப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும்.
பரிசுகள் விவரம்
முதல் பரிசு: ரூ.25,000
2-ம் பரிசு: ரூ.15,000
3-ம் பரிசு: ரூ.10,000
இதுதவிர, மேலும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இதுபற்றிய கூடுதல் விவரங்களை சென்னை மக்கள் 9841298938 என்ற செல்போன் எண்ணிலும், மற்ற மாநகரமக்கள் 9841011949 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு அறியலாம்.
‘தி இந்து’ குழுமத்தின் ‘கொலு கொண்டாட்டம் 2021’ போட்டியில் டைட்டில் ஸ்பான்சராக விடியெம் கிச்சன் அப்ளையன்சஸ் உள்ளது. நாகா ஃபுட் புராடக்ட்ஸ் உடன் இணைந்து மங்கள்தீப் இதை வழங்குகிறது. எஜுகேஷன் பார்ட்னராக எஸ்எஸ்விஎம் இன்ஸ்டிடியூஷன்ஸ், கலர் பார்ட்னராக நிப்பான் பெயின்ட், ஸ்கூல் பார்ட்னராக சரஸ்வதி வித்யாலயா, அசோசியேட் ஸ்பான்சர்களாக காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ், ஃபிரெஷே‘ஸ் ஆகியவை உள்ளன.
பரிசுகளை ஆச்சி மசாலா, காட்டன் ஹவுஸ், ஜி ஆர்கானிக்ஸ், எஸ்டிலோ கிளோத்திங், சாரல் ஃபுட்ஸ், பிஎஸ் டாமரிண்ட், ஆர்சிஎல் ஃபுட்ஸ், சேலை நாயகி, சுப்ரீம் ஃபர்னிச்சர் ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.