உயிரியலில் தாவரவியல் வினாக்கள் எளிது; விலங்கியல் மிகவும் கடினம்: பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கருத்து

உயிரியலில் தாவரவியல் வினாக்கள் எளிது; விலங்கியல் மிகவும் கடினம்: பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கருத்து
Updated on
1 min read

பிளஸ் 2 உயிரியல் தேர்வில் தாவரவியல் பிரிவு வினாக்கள் எளிதாக இருந்ததாகவும், விலங்கி யல் பிரிவு கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொழிற்கல்வி படிப்புகளில் சேர முக்கிய தேர்வாக கருதப்படும் கணிதம், வேதியியல், விலங்கி யல் தேர்வுகள் முடிவடைந்து விட்டன. வேதியியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலை தெரிவித் துள்ளனர். இந்நிலையில், உயிரி யல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர உயிரியல் மற்றும் தாவர வியல் பாட மதிப்பெண் மிகவும் முக்கியமானவை ஆகும். உயிரி யல் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் கூறும்போது, “தாவரவியல் பிரிவு வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. அதே நேரத்தில் விலங்கியல் பிரிவு வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தன. குறிப்பாக 3 மதிப்பெண், 10 மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டிருந்தன” என்று தெரிவித்தனர். விலங்கியல் பிரிவில் வினாக்கள் சற்று கடினம் என்பதை பாட ஆசிரியர்களும் ஒப்புக்கொண்டனர்.

வரலாறு, வணிக கணிதம் தேர்வுகள் எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ, மாணவி கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு வேதியியல் தேர்வும் உயிரியல் தேர்வும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தி ருப்பதால் மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.

கடைசித் தேர்வாக ஏப்ரல் 1-ம் தேதி இயற்பியல், பொருளாதார பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in