எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடங்கியது: தமிழ் முதல் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடங்கியது: தமிழ் முதல் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி
Updated on
2 min read

தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 11 லட்சம் மாணவ, மாணவி கள், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்துவரும் நிலை யில், தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 3,369 மையங் களில் 10.72 லட்சம் மாணவ, மாணவி கள், 48 ஆயிரம் தனித்தேர்வர்கள் என 11 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். சென்னையில் 209 மையங்களில் 53 ஆயிரத்து 548 பேர் தேர்வில் கலந்துகொண்டனர்.

கற்றல் குறைபாட்டால் (டிஸ்லெக் சியா) பாதிக்கப்பட்டவர்கள், பார்வை யற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திற னாளிகள் வசதிக்காக தரைதளத்தி லேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னை புழல், திருச்சி, பாளையங் கோட்டை மத்திய சிறைகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் 250 கைதிகள் தேர்வு எழுதினர்.

பறக்கும் படையினர் ஆய்வு

மாணவர்கள் காப்பி அடிப்பது, பிட் அடிப்பது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் ஒழுங்காக தேர்வு எழுதுகிறார்களா என்று கண்காணிக்க மாநிலம் முழுவதும் 7 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டிருந்தன. இதுதவிர, மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகிய வருவாய்த் துறை அதிகாரிகளும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னையில் தம்புசெட்டி தெரு, முத்தியால்பேட்டை மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் நேரில் ஆய்வு செய்தார். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார். ஆய்வின்போது தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் மரிய ஆரோக்கியராஜ் உடன் இருந்தார்.

மையங்களில் போலீஸ் பாதுகாப்பு

தேர்வை முன்னிட்டு மாநிலம் முழு வதும் அனைத்து தேர்வு மையங்களி லும் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. தேர்வு நேரத்தின்போது வெளிநபர்கள் யாரும் மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மைய வளாகத்துக்குள் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் செல் போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருந்தது.

முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. மாணவ, மாணவிகள் நன்றாக தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் ஆசிரியர்கள் தலைமையில் காலையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாண வர்களுக்கு ஆசிரியர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து அவர்களை தேர்வுக்கூடத்துக்கு வழியனுப்பி வைத்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் மாணவ, மாணவிகள் காலை 9 மணிக்கு தேர்வுக்கூடத்துக்குச் சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துகொண்டனர்.

காலை 9.15 மணிக்கு அனைவருக் கும் வினாத்தாள் வழங்கப்பட்டது. வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் கொடுக்கப்பட்டது. 9.25 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங் களை சரிபார்க்க 5 நிமிடம் அளிக்கப்பட்டு சரியாக 9.30 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கினர். மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக பல மாணவ, மாணவிகள் கூறினர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறும் விதமாக, சிறப்பு கற்றல் கையேடுகள் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தன. அதில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். தமிழ் 2-ம் தாள் தேர்வு இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in