

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.72% வாக்குப்பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்.9) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 9.72% வாக்குப்பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் அதிகபட்சமாக 13.88% வாக்குப்பதிவும், திருப்பத்தூரில் 5.22% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மாவட்டவாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
திருநெல்வேலி: 6.59%
தென்காசி: 11.74%
விழுப்புரம்: 13.88%
திருப்பத்தூர்: 5.22%
செங்கல்பட்டு: 6.85%
காஞ்சிபுரம்: 10.51%
ராணிப்பேட்டை: 7.4%
வேலூர்: 8.5%
கள்ளக்குறிச்சி: 12.07%
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 உள்ளாட்சி பதவிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்காக மொத்தம் 6.652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.