Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

இலங்கையில் ஜவுளி வர்த்தகம், முதலீட்டு வாய்ப்பு அதிகம்: இலங்கை துணைத் தூதர் டி.வெங்கடேஸ்வரன் தகவல்

இலங்கையில் ஜவுளி வர்த்தகம்,முதலீட்டு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக இலங்கை துணைத்தூதர் டி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கு இலங்கையில் கிடைக்கும் வர்த்தகம், முதலீட்டுவாய்ப்புகள், ஜவுளித் துறைக்கான வணிகச் சூழல்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், இலங்கைதுணைத் தூதரகம் மற்றும் தமிழ்நாடு விசைத்தறி கூட்டமைப்பு சார்பில், சென்னையில் கடந்த 6-ம் தேதிநடைபெற்றது. இதில் இலங்கைதுணைத் தூதர் டி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று பேசியதாவது:

பரஸ்பரம் நன்மை

இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாக இந்தியா திகழ்கிறது. 2-வது மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராகவும் இந்தியாவிளங்குகிறது. இலங்கையில் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும்முதலீடுகள் சார்ந்த வாய்ப்புகள்உள்ளன. அவை இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும்.

இலங்கையும், இந்தியாவும் அருகருகே இருப்பதால், இரு நாடுகளின் சர்வதேச வர்த்தகர்கள் குறைந்த போக்குவரத்து செலவுகள்மற்றும் குறைவான சரக்கு போக்குவரத்து காலநேரம் போன்ற காரணங்களால் மேம்பட்ட வர்த்தகத்தின் நன்மைகளைப் பெற முடியும்.

இந்திய, இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியத்தால் வழங்கப்படும் பிற சலுகைகள் போன்றவற்றால் மேலும் வர்த்தக பலன்கள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கில், தமிழ்நாடு விசைத்தறி கூட்டமைப்பின் தலைவர் மதிவாணன், இலங்கையில் கிடைக்கும் அதீத வசதிகள் மற்றும் உயர் தர உற்பத்தி செயல்முறைகள் காரணமாக அந்நாட்டில் வணிகம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

தென்னிந்திய ஆடை உற்பத்தியாளர்களுக்கு இலங்கையில் அதிகவாய்ப்புகளை ஆராய்வதற்கும், ஒரு ஜவுளி மற்றும் மேலாண்மை நிறுவனத்தை நிறுவுவதற்கும் நிலவும் சாதகமான சூழல்கள் குறித்தும் விளக்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x