வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள் தர மாட்டோம்: சத்தியம் செய்து வாக்கு சேகரித்த வேட்பாளர்கள்

வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள் தர மாட்டோம்: சத்தியம் செய்து வாக்கு சேகரித்த வேட்பாளர்கள்
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் ஊராட்சி மன்றத்தேர்தலில் முதல் கட்டத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்து வாக்கு சேகரித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த 6ம் தேதி செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடைபெற்றது.

9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்போட்டியிட்ட வேட்பாளர்க ளில் பலர் வாக்காளர்களுக்கு டிஷ் ஆண்டெனா உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட் கள், நாள் தோறும் விருப்பப்பட்ட வாக்காளர்களுக்கு இறைச்சி மற்றும் பணம் கொடுத்து வாக்கு சேகரித்தனர்.

இந்நிலையில் விழுப்பு ரம் மாவட்டம், செஞ்சி ஒன்றி யத்தைச் சேர்ந்த புத்தகரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட சந்தானன், விஜயகுமார் என்றஇரு வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட எவ்வித பரிசு பொருட் களும் கொடுக்கக்கூடாது என்று முடிவெடுத்து வாக்கு சேகரித்து வந்தனர்.

முதல் கட்டத் தேர்தலின்போது, கிராம மக்கள் முன் னிலையில் அக்கிராமத்தில் உள்ள விநாயர் கோயிலில் இரு வேட்பாளர்களும், “வாக்காளர்களுக்கு பணம் கொடுக் கமாட்டோம்” என சத்தியம் செய்து வாக்கு சேகரித்தனர்.

இது குறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, “இவர்கள் இருவரும் சேர்ந்து வாக்குக்கு பணம் கொடுக்கக் கூடாது என முடிவெடுத்ததை வரவேற்றோம். அதே நேரம் அவர்களில் ஆதரவாளர்கள் யாரும் பணம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக கோயில் முன் அனைவரின் முன்னிலையில் அவர்கள் சத்தியம் செய்தனர். எங்கள் கிராமத்தில் 1,164 வாக்குகளில் 1,075 வாக்குகள் பதிவானது. இதில் வெற்றி பெறுவோர் எங்கள் கிராம வளர்ச்சியை முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தனர்.

வேட்பாளர்களில் ஒருவ ரான விஜயகுமாரிடம் இதுபற்றி கேட்டபோது, “இது ஒன்றும் அதிசயமான செயல்அல்ல.

இப்போது நடக்கும் சூழ்நிலையால் இது அதிசய மாக தெரிகிறது. கிராம நன்மைக்காக இப்படி ஒரு முடிவெடுத்தோம். அதில் இருவ ரும் உறுதியாக இருந்தோம்” என்று முடித்துக்கொண்டார். மற்றொரு வேட்பாளரான சந்தானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதே செஞ்சி ஒன்றியத் தில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி கள் ஏலம் விடப்பட்டதாக குற் றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடதக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in