

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் வாரத்தின் அனைத்து நாட்களும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜக சார்பில் பழநி அடிவாரத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பாஜக தேசியச் செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச்.ராஜா தலைமை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், கூட்டத்தை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஹெச். ராஜா, பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம், மகளிர் அணி மாநிலத் தலைவர் மீனாட்சி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் மீது பழநி அடிவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.