மதுரை மாணவர்களுக்கு இதுவரை ரூ.54 கோடி கல்விக்கடன்: கூடுதலாக வழங்க நடவடிக்கை- சு.வெங்கடேசன் தகவல்

மதுரை மாணவர்களுக்கு இதுவரை ரூ.54 கோடி கல்விக்கடன்: கூடுதலாக வழங்க நடவடிக்கை- சு.வெங்கடேசன் தகவல்
Updated on
1 min read

மதுரை மாணவர்களுக்கு இதுவரை 54 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக வழங்க அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மதுரையில் கூடுதலாகக் கல்விக் கடனை வழங்குவதற்காக வங்கி அதிகாரிகளுடன் 3-வது முறையாக ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தகவலின்படி, இதுவரை மதுரை மாவட்டத்தில் 818 மாணவர்கள் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். அதில் 625 மாணவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.54.22 கோடி வழங்கப்பட்டுள்ளது.

126 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 64 மனுக்கள் சரியான ஆவணங்கள் இல்லாமலும் வங்கி மாறுதல்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிப்பிற்கான காரணங்கள் விவாதிக்கப்பட்டன.

அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் அதிகமான மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைத்திட சிறப்புக் கடன் முகாம்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் வங்கிகளின் நிறைகுறைகள் ஆலோசிக்கப்பட்டு, அடுத்தகட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in