

நாகர்கோவில் - கோவை ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (அக். 08) வெளியிட்ட அறிக்கை:
"கோவில்பட்டி நகரம், தென் தமிழகத்தில் முதன்மையான வணிக மையங்களுள் ஒன்று ஆகும். பருத்தி, மிளகாய் மற்றும் தீப்பெட்டிகள், கோவில்பட்டியில் இருந்து நாடு முழுமையும் செல்கின்றன. கோவில்பட்டிக்கும், கோவை மாநகருக்கும் இடையே வணிகத் தொடர்புகள் நிறைய உண்டு. எனவே, நாள்தோறும் மக்கள் இரண்டு நகரங்களுக்கும் சென்று வருகின்றார்கள்.
ஆனால், நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் ரயில் எண் 02667, கோவில்பட்டியில் நிற்பது இல்லை.
எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மேற்கண்ட ரயில், கோவில்பட்டியில் நின்று செல்கின்ற வகையில், ஏற்பாடு செய்து தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.