

முதல்வர் மு.க.ஸ்டாலினை, தென் மண்டல ஆலய ஆய்வுத்திட்ட தொல்பொருள் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நேற்று சந்தித்தார்.
தமிழகத்தில் கீழடியில் தொல்லியல் ஆய்வுகளின் போது, 2 கட்ட ஆய்வுகளுக்கு கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணா. கீழடியில் கிடைத்துள்ள தொல்லியல் பொருட்கள் மூலமாக தமிழர்களின் நாகரிகத்தை வெளிக்கொண்டு வந்த நிலையில், அவர் திடீரென அசாமுக்கு மாற்றப்பட்டார். இதற்குபல்வேறு கட்சிகள் எதிர்ப்புதெரிவித்தன. மீண்டும் தமிழகத்துக்கு அவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அசாமில் இருந்த அவர் கோவா மண்டலத்துக்கு மாற்றப்பட்டு பணியாற்றி வந்தார். இதற்கிடையில் தற்போது கீழடி ஆய்வுபல கட்டங்களை தாண்டிவிட்டது. இந்நிலையில், கடந்தசெப்டம்பர் மாதம் மத்தியதொல்லியல் துறையின் இடமாற்ற உத்தரவில், கோவாவில் இருந்து அமர்நாத் ராமகிருஷ்ணா தென்மண்டல ஆலய ஆய்வுத்திட்ட தொல்லியல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சென்னையில் அவர் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவர் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.