

பி.ஆர்க். படிப்பில் சேர இன்று (திங்கள் கிழமை) முதல் விண்ணப்பங்கள் வழங்கப் படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரி, அரசு உதவி பெறும் பொறியி யல் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரி களில் (அரசு ஒதுக்கீடு) பி.ஆர்க். (கட்டிடக்கலை) படிப்பில் சேர இன்று (திங்கள்கிழமை) முதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.250. விண்ணப்பக் கட்டணத்தை ரொக்கமாகவோ, டிமாண்ட் டிராப்டாகவோ (செயலாளர் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-25) கொடுத்து சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழ தேர்வு மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பெற விரும்பும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சாதி சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை தபால் மூலம் பெற கட்டணம் ரூ.700. (எஸ்சி,எஸ்டி வகுப்பி னருக்கு ரூ.450). விண்ணப்பத்துக்கான கட்டணத்தை டிமாண்ட் டிராப்டாக அனுப்ப வேண்டும். மேலும் www.annauniv.edu/tnea2014 என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப் பம் பெறலாம். உரிய விண்ணப்பக் கட்டணத்துக்கு டி.டி. செலுத்திவிட வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங் களை ஜூன் 14-ந் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா பல்கலைக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-22358265 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலா ளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.