Published : 07 Oct 2021 09:25 PM
Last Updated : 07 Oct 2021 09:25 PM

ஐந்தாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பணிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

ஐந்தாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 10.10.2021 அன்று நடைபெற தகுந்த முன் ஏற்பாடுகள் செய்யும் பொருட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று (07.10.2021) மாநில தடுப்பூசி மருந்து கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி பணிகள் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை, மேலும் விரிவாக்கம் செய்யும் பொருட்டு சிறப்பு முகாம்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டு முதலாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 12.09.2021 அன்று நடைபெற்றதில் 28.91 இலட்சம் பயனாளிகளுக்கும், இரண்டாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 19.09.2021 அன்று நடைபெற்றதில் 16.43 இலட்சம் பயனாளிகளுக்கும், Íன்றாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 26.09.2021 அன்று நடைபெற்றதில் 25.04 இலட்சம் பயனாளிகளுக்கும் மற்றும் நான்காவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 03.10.2021 அன்று நடைபெற்றதில் 17.40 இலட்சம் பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 87,80,262 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதுவரை (07.10.2021) தமிழ்நாட்டில் 5,01,30,323 பயனாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மையங்களின் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 3,73,18,608 பயனாளிகளுக்கும் (64%) மற்றும் இரண்டாவது தவணையாக 1,28,11,715 பயனாளிகளுக்கும் (22%) செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஐந்தாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 10.10.2021 அன்று நடைபெற தகுந்த முன் ஏற்பாடுகள் செய்யும் பொருட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று (07.10.2021) மாநில தடுப்பூசி மருந்து கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தற்போது 50.12 இலட்சம் கரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. அடுத்து வரும் மூன்று நாட்களில் சுமார் 6 இலட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டாலும் ஐந்தாவது சிறப்பு முகாமிற்கு சுமார் 44 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, சுமார் 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மூன்றாம் முறையாக மக்களிடையே உள்ள கரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு (Sero Surveillance Survey) நடத்தப்பட்டதில் விருதுநகர், தென்காசி மற்றும் சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் 80% அதிகமாகவும் பெரம்பலுர், அரியலுர், நீலகிரி மற்றும் கருர் மாவட்டங்களில் 60% குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, மேற்கூறிய 4 மாவட்டங்களுக்கு தடுப்பூசி பணிகளை மேம்படுத்தும் பொருட்டு அதிகமான அளவில் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x