

அருந்ததியர் எழுச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து மக்கள் நலக் கூட்டணியின் 4 கட்சித் தலைவர்களும் கூடி பேசி முடிவெடுப்போம். நேர்மையான முறையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
மக்கள் நலக்கூட்டணியில் இணையுமாறு தேமுதிகவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்க வகையில் உள்ளன. ஆனால், செயல் பாடுகள் போதிய அளவில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.