15 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் 2022 ஏப்ரல் முதல் 8 மடங்கு உயரும்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

15 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் 2022 ஏப்ரல் முதல் 8 மடங்கு உயரும்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு
Updated on
1 min read

15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கான உரிமம் புதுப்பிப்பு கட்டணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 8 மடங்கு உயர்த்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள் ளது.

இந்தியாவில் பழைய வாகனங்களை படிப்படியாக அழிப்பதன் மூலம் புதிய வாகனங்களை மக்கள்பயன்படுத்தும் வகையில் மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது தொடர்பான புதிய விதிகள் தற்போது அறி முகம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவைபுதுப்பிக்க வழக்கமான கட்டணத்தை விட 8 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த புதிய விதிமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலாகும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதிய அறிவிப்பின்படி 15 ஆண்டுகளுக்கு மேலான காரின் பதிவை புதுப்பிக்க ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும். இதுதற்போது ரூ.600 ஆக இருக்கிறது. இதேபோல், பழைய இரு சக்கரவாகனங்களின் பதிவை புதுப்பிக்கரூ.1,000 செலுத்த வேண்டும். தற்போது ரூ.300 வசூலிக்கப்படுகிறது.

வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் என்றால், பதிவை புதுப்பிப்பதற்கு ரூ.12,500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதற்கான தற்போதைய கட்டணம் ரூ.1,500 என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in