

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. அதை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டு கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா ஆகிய 12 மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், திருவனந்தபுரத் தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை திமுக செய்தித் தொடர்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலை சந்தித்துப் பேசினார்.
அப்போது, நீட் தேர்வை ரத்து செய்ய ஆதரவு கோரி முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பினராயி விஜயனிடம் வழங்கினார். அத்துடன், நீட் தேர்வு தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளையும் அவரிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது தென்காசி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் தனுஷ் எம்.குமார், கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.