Published : 28 Mar 2016 09:59 AM
Last Updated : 28 Mar 2016 09:59 AM

‘உங்கள் ஊர்.. உங்கள் அன்புமணி’ என்ற தலைப்பில் பொதுமக்களுடன் அன்புமணி கலந்துரையாடல்: தூத்துக்குடியில் இன்று தொடங்குகிறார்

‘உங்கள் ஊர்... உங்கள் அன்பு மணி’ என்ற தலைப்பில் மாவட்ட மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தூத்துக்குடியில் இன்று தொடங்குகிறார்.

இது தொடர்பாக பாமக தலைமை நிலை யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் காணப்படும் பிரச்சினைகள் குறித்து அந்தந்த மாவட்ட மக்களுடன் கலந்துரையாட பாமக இளைஞர் அணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ‘உங்கள் ஊர்... உங்கள் அன்புமணி’ என்ற தலைப்பில் அவர் 12 நாட்களுக்கு மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை தூத்துக்குடியில் தொடங்குகிறார். மாலை நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்களுடன் விவாதிக்கிறார்.

29-ம் தேதி காலை மதுரையில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட பிரச்சினைகள் குறித்தும், மாலை திண்டுக் கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட பிரச் சினைகள் குறித்தும், 30-ம் தேதி காலை திருச்சி யில் திருச்சி, கரூர் மாவட்ட வளர்ச்சி குறித்தும், மாலை புதுக்கோட்டையில் புதுக் கோட்டை, சிவகங்கை மாவட்ட வளர்ச்சி பற்றியும் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த வர்களுடன் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடுகிறார்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து 31-ம் தேதி காலை கும்பகோணத்திலும், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பிரச்சினைகள் குறித்து மாலை அரியலூரிலும் விவாதிக்க உள்ளார். ஏப்ரல் 1-ம் தேதி காலை கடலூரிலும், மாலை விழுப்புரத்திலும் அம்மாவட்ட பிரச்சினைகள் குறித்து பேசுகிறார். ஏப்ரல் 2-ம் தேதி காலை திருவண்ணாமலையிலும், மாலை காஞ்சிபுரத்திலும் அந்தந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாட உள்ளார்.

ஏப்ரல் 5-ம் தேதி காலை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் பிரச்சினைகள் குறித்தும், மாலையில் ஈரோட்டில் அம்மாவட்ட பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கவுள்ளார். ஏப்ரல் 6-ம் தேதி காலை சேலத்தில் சேலம், நாமக்கல் மாவட்ட பிரச்சினைகள் பற்றியும், மாலையில் தருமபுரியில் தருமபுரி, கிருஷ் ணகிரி மாவட்ட பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடுகிறார். ஏப்ரல் 7-ம் தேதி காலை வேலூரிலும், மாலையில் திருவள்ளூரிலும் கலந்தாய்வு செய்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x