ராணுவ மைதானத்தின் ஒரு பகுதிக்கு ‘ஆரோக்கிய ராஜீவ்’ பெயர்: தொடர்ந்து 2 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற திருச்சி வீரருக்கு உதகையில் கவுரவம்

தனது பெயர் சூட்டப்பட்ட பகுதிக்கு முன்பு ஒலிம்பிக் வீரர் ஆரோக்கிய ராஜீவ்.
தனது பெயர் சூட்டப்பட்ட பகுதிக்கு முன்பு ஒலிம்பிக் வீரர் ஆரோக்கிய ராஜீவ்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜீவ்(30). உதகை வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமெண்டில் சுபேதாராக பணிபுரிந்து வரும் இவர், தேசிய அளவிலான போட்டிகளில் மட்டுமின்றி சர்வதேச தடகளப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருகிறார்.

2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள், கலப்பு 4X400 தொடர் ஓட்டம் என 2 பிரிவுகளில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.

இப்போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்ல முடியவில்லை. எனினும்முகமது அனஸ் யஹியா, நோநிர்மல் டாம், ஆரோக்கிய ராஜீவ்,அமோஜ் ஜேக்கப் ஆகிய வீரர்கள்இடம்பெற்ற ஆண்கள் பிரிவு அணியினர் 4X400 தொடர் ஓட்டத்தில் குறைந்த நிமிடங்களில் (3:00:25) பந்தய தூரத்தைக் கடந்து ஆசிய அளவில் சாதனை படைத்தனர்.

இந்நிலையில், இவர் பணிபுரிந்துவரும் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் வளாகத்தில் உள்ள தங்கராஜ் மைதானத்தின் ஒரு பகுதிக்கு (பார்வையாளர் மாடம்) ஆரோக்கிய ராஜீவ் பெயரைச் சூட்டி கவுரவப்படுத்தியுள்ளது இந்திய ராணுவம். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஆரோக்கிய ராஜீவ், வெலிங்டன் ராணுவ மைதானத்தில் தனது பெயர் சூட்டப்பட்ட பகுதிக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்து ‘பெரிதாக தோல்வியடையத் துணிந்தவர்களால் மட்டுமே, எப்போதும் பெரியளவில் சாதிக்க முடியும்’ என்ற வாசகத்துடன் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஆரோக்கிய ராஜீவ் கூறியதாவது: நான் பயிற்சி பெறும் மைதானத்தின் ஒரு பகுதிக்கு எனது பெயர் சூட்டப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த அங்கீகாரங்களில் மிகப்பெரிய ஒன்றாக கருதுகிறேன். 2016 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அடுத்த ஆண்டில், இந்தியஅரசு எனக்கு அர்ஜூனா விருது கொடுத்தது. அதன் பின்பு 2021-ல்2-வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று திரும்பியுள்ள நிலையில், இந்திய ராணுவ வரலாற்றில் இடம்பெறும் வகையில் தற்போது இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கிடைத்துள்ள உற்சாகம், என்னை இன்னும்வேகமாக ஓட வைக்கும். எனவே,நிச்சயம் மேலும் மேலும் வெற்றிகளை குவிப்பேன் என்றார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற, அர்ஜூனா விருதுபெற்ற உதகையைச்சேர்ந்த கால்பந்து வீரர் தங்கராசுவின் பெயர், வெலிங்டன் மைதானத்துக்கு ஏற்கெனவே சூட்டப்பட்டுஉள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in