

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அனிச்சக்குடி கிராமத்தில் உள்ள கோயிலில் வழிபாடு தொடர்பாக இரு தரப்புக்கு இடையே பிரச்சினை உள்ளது.
இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அதிமுக ஒன்றியச் செயலாளர் நந்திவர்மன் நேற்று அக்கோயிலில் வழிபடச் சென்றார். அப்போது அங்கு துரைராஜ் என்பவர் கோயிலில் பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். இதற்கு மற்றொரு தரப்பைச் சேர்ந்த மலைராஜ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து துரைராஜிடம் தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் கோயிலுக்குச் சென்றார். அவர் புகாரை விசாரித்துக் கொண்டிருந்தபோதே மலைராஜ் வாக்குவாதம் செய்துதிடீரென எஸ்.ஐ. தலையில் அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவரை உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.
எஸ்பி இ.கார்த்திக் அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மலைராஜை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.