‘எங்கிருந்தாலும் வாழ்க’: ஹெச்.ராஜா வாழ்த்து

‘எங்கிருந்தாலும் வாழ்க’: ஹெச்.ராஜா வாழ்த்து
Updated on
1 min read

ஈரோட்டில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட கட்சிகளின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துகிறேன். தமிழகத்தில் தற்போது எல்லோருக்கும் முதல்வர் பதவி மீது ஆசை வந்துவிட்டது. மார்ச் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் தொகுதிவாரியாக மாநாடுகள் நடத்தப்படும். அதன் பின்னர் தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகியோர் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in