சிறப்பாக பணிபுரிந்த 17 போலீஸாருக்கு ஆணையர் பாராட்டு

சிறப்பாக பணிபுரிந்த 17 போலீஸாருக்கு ஆணையர் பாராட்டு
Updated on
1 min read

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த போலீஸாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையாளர் பரிசு வழங்கி பாராட்டினார்.

குற்றம் நடந்த சிறிது நேரத்தில் குற்ற வாளிகளை கைது செய்தல் மற்றும் முன்னெச்சரிக்கையாக குற்றவாளிகளை கைது செய்த 17 போலீஸாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் நேற்று பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சிறப்பாக பணிபுரிந்த ஓட்டேரி காவல் நிலையத்தை சேர்ந்த முதல்நிலைக் காவலர் எஸ்.எர்னெஸ்ட்பால், வியாசர்பாடி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் பி.ஆனந்தராஜ், திருவொற்றியூர் காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கே.நடேசன், முதல்நிலைக் காவலர் ஞானதாஸ், குமரன்நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.ஆனந்தராஜ், செம்மஞ்சேரி காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா, பன்னீர் செல்வம், தலைமைக் காவலர் மதுரை, சங்கர்நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜி.வெங்கடேசன், உதவி ஆய்வாளர் டி.திக்பால், சிறப்பு உதவி ஆய்வாளர் அறிவழகன் மற்றும் தலைமைக் காவலர் வி.பாலகிருஷ்ணன், எஸ்பிளனேடு காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, முதல்நிலைக் காவலர் ஜி.அறிவுசெல்வன், காவலர்கள் எம்.முத்துகிருஷ்ணன், எல்.பள்ளிகொண்ட பெருமாள், ஆயுதப்படைக் காவலர் நமராஜன் ஆகிய 17 பேரையும், திருட்டை தடுக்கும் விதமாக போலீஸுக்கு தகவல் தெரிவித்த குமரன் நகரை சேர்ந்த அருணகிரி என்பவரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் நேற்று காலை நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.

கூடுதல் ஆணையர் கே.சங்கர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in