புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு அரசாணை ரத்து: அக்டோபர் 12-க்குள் புதிய தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு அரசாணை ரத்து: அக்டோபர் 12-க்குள் புதிய தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு
Updated on
1 min read

புதுச்சேரி உள்ளாட்சித்தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்கு டியின மக்களுக்கான இடஓதுக்கீடு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 2006ல் நடந்த தேர்தலை போன்று பழைய நடைமுறைப்படியே உள் ளாட்சித்தேர்தல் நடக்கவுள்ளது. அக்டோபர் 12-க்குள் புதிய தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது.

புதுவையில் கடந்த 10 ஆண்டுக ளுக்குப் பிறகு, உள்ளாட்சித் தேர்தல் ஆறிவிப்பை கடந்த செப்.22-ம் தேதி, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு, பணி களை மேற்கொண்டது.

இந்த நிலையில், இந்தத் தேர்தலில் பட்டியிலனத்தவர், பிற்பட்டோருக்கான இட ஓதுக்கீடில் குளறுபடி உள்ளதால், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில், புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து, தேர்தல் ஏற்பாட்டில் குளறுபடி இருப்பதை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், "புதுவையில் தற் போது அறிவித்த உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற அனுமதியளிக்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, 5 நாட்களில் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். இடஓதுக்கீடு சட்ட விதிகளை சரியாக பின்பற்றியும், விரைவில்தேர்தலை நடத்தி முடிக்க வேண் டும்" என்று உத்தரவிட்டிருந்தது.

உள்ளாட்சித்தேர்தலில் பிற்படுத் தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஓதுக்கீடு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை நேற்று இரவு ரத்தானது.

இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, "கடந்த 2019 அரசாணை ரத்தானது. பிற்பட்டோர், பழங்குடியினர் போன்ற சுழற்சி முறை இடஓதுக்கீடுகளின்றி, கடந்த 2006-ம் ஆண்டு தேர்தல் போன்று பழைய நடைமுறைகள்படி தேர்தல் நடக்கும். கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பொது, பட்டியிலனத்தவர், பெண்கள் இடஓதுக்கீடுகளுடன் வார்டுகள் சீரமைக்கப்படும். அதன் பிறகே தேர்தல் துறை சார்பில், தற்போது அறிவித்த தேர்தலை ரத்து செய்து, ஓரு வார காலத்தில் புதிய தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அதனால் நீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபர் 12-க்குள்உள்ளாட்சித் தேர்தல் புதிய அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது." ஏன்றனர்.

புதுச்சேரியில் 38 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2006 ல்உள்ளாட்சித் தேர்தலை நடத்தநீதிமன்றத்தில் ஒரு நீண்ட முயற்சி எடுத்த சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெரு மாள் இதுபற்றி கூறுகையில், "பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை வழங்கும் 2019 ம் ஆண்டின் அறிவிப்பை திரும்பப் பெறுவதற்கான அர சாங்கத்தின் முடிவு, தேர்தலை சுமூகமாக நடத்துவது போல் தெரியவில்லை. "என்று குறிப் பிடுகிறார். எதிர்க்கட்சியான திமுகவும் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in