

தமிழக அரசியல் நிலவரம் குறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் மருத்துவர் என்.சேதுராமன், `தி இந்து’செய்தியாளரிடம் கூறியது:
ஏழ்மை, ஊழல், ஜாதி பிரச்சி னையை ஒழிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் கட்சியை தொடங்கி னேன். இதற்காக தலித் சமூக தலைவர் களுடன் இணைந்து பல்வேறு முயற்சி களை மேற்கொண்டேன். ஆனாலும் தோல்விதான் மிஞ்சியுள்ளது. காரணம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அரசியல் வாதிகள் ஊழல் மயமாக்கிவிட்டனர். இதன் உச்சம்தான் திருமங்கலம் இடைத்தேர்தல். இதன் தாக்கம் மற்ற தேர்தல்களிலும் பின்தொடர்கிறது.
தேர்தலில் வெற்றி பெற்றதால் பாமக நிறுவனர் ராமதாஸ் போல் வளர்ந்துவிடுவேன் என அதிமுக, திமுக கருதுகிறது. இதனால் தோற்கும் தொகுதியாக எங்கள் கட்சிக்கு ஒதுக்குகின்றனர். தலித் வாக்குகள் எங்களுக்கு கிடைக்காமல் செய்யும் பணியையும் இக்கட்சிகளே செய்கின் றன. நடக்கவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகவுடன்தான் கூட்டணி. இதில் எந்த மாறுதலும் இல்லை. ஜெயலலிதா எதைச் செய் தாலும் ஏற்போம். ஜாதிக் கலவரத்தில் ஜெயலலி எடுக்கும் நியாயமான நடவடிக்கையை தலித் சமூகத்தினரும் ஆதரிக்கின்றனர். இத்தகைய அணுகுமுறை திமுகவிடம் இல்லை.
கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன். அவர் நினைக்கும்போதுதான் சந்திக்க முடிகிறது. இதில் திருப்திபடுவதைத் தவிர வேறு வழியில்லை. விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் போட்டி பலமாக இருக்கும். ஆனாலும் அதிமுகவே வெற்றி பெறும்.