பெண் டாக்டர் கொலை வழக்கில் கைதான 4 பேர் சிறையில் அடைப்பு

பெண் டாக்டர் கொலை வழக்கில் கைதான 4 பேர் சிறையில் அடைப்பு
Updated on
1 min read

சென்னை பெண் டாக்டர் கொலை யில் கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை முகப்பேர் ஏரித் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா(63). ஓய்வு பெற்ற அரசு டாக்டரான இவருக்கு சென்னை தங்கசாலையில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளன. ஏராளமான நகைகளும் அணிந்திருப்பார். மல்லிகாவை தீர்த்து கட்டி அவரது நகைகள் மற்றும் தங்கசாலையில் உள்ள சொத்தை அபகரிக்க அவ ரது வீட்டு வேலைக்காரி சத்யா திட்ட மிட்டார். இந்த திட்டத்தில் கார் ஓட்டு நரும், தனது காதலனுமான கார்த்தி மற்றும் நில புரோக்கர் கணே சனை கூட்டு சேர்த்துக் கொண்டார்.

கடந்த 12ம் தேதி தங்கசாலையில் உள்ள இடம் விற்பனை தொடர் பாக சத்யாவுடன் மல்லிகா காரில் சென்றார். காரை கார்த்தி ஓட்டிச்சென் றார். இவர்களுடன் புரோக்கர் கணேசனும் இணைந்துகொண்டார். கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் கணேசன், சத்யா ஆகியோர் சேர்ந்து மல்லிகாவை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் மல்லிகாவின் 3 பவுன் நகை கள், சொத்து பத்திரங்களை சுருட்டிக் கொண்டு அவரது உடலை திண்டி வனம் அருகே மயிலம் பகுதியில் வீசினர். காரை திண்டிவனம் சாலை யிலேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். டாக்டர் மல்லிகா காணாமல் போனது தொடர்பாக நொளம்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே மயிலம் பகுதி யில் பிணமாக கிடந்த மல்லி காவின் உடல் மீட்கப்பட்டது. இதனையறிந்த நொளம்பூர் மற்றும் மயிலம் போலீஸார் இணைந்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

சென்னை அருகே மேட்டு பாளையம் அருகே சத்யா, கார்த்தி மற்றும் கணேசன் ஆகியோர் கைதானார்கள். மல்லிகாவிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அடகு நிறுவனம் மற்றும் சத்யாவின் உறவினரான ஆதிலட்சு மியிடம் இருந்து மீட்கப்பட்டன. சொத்து பத்திரமும் மீட்கப்பட்டது.

கைதான சத்யா, கார்த்தி, கணேசன், ஆதிலட்சுமி ஆகியோரி டம் மயிலம் போலீஸ் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 4 பேரையும் திண்டி வனம் நீதிமன்றத்தில் செவ்வாய்க் கிழமை போலீஸார் ஆஜர்படுத்தி னர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சரிதா உத்தர விட்டார்.

இதை தொடர்ந்து கார்த்தி, கணேசன் ஆகிய 2 பேர் கடலூர் மத்திய சிறையிலும், சத்யா, ஆதிலட்சுமி ஆகியோர் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in