

தேச விரோத சக்திகளுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மக்கள் நல கூட்டணி வழக்கறிஞர்கள் மாநாட்டில் தேச துரோக குற்றச்சாட்டு பிரிவை இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய திருமாவளவன் அவர்களின் தேச விரோத சக்திகளுக்கு ஆதரவு குரல், தேச பக்தர்களுக்கு கவலை அளிக்கிறது. மக்கள் நல கூட்டணி என்ற போர்வையில் தேச விரோதம் என்ற விஷத்தை தமிழகத்தில் தேர்தல் களத்தில் தூவ முயல்வது ஆபத்தானது. அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தையே தேச விரோத சக்திகளுக்கு ஆதரவாக திருத்த சொல்லும் திருமாவளவனை கண்டிக்கும் திராணி கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் இருக்கிறதா?
டெல்லி, ஹைதராபாத் பல்கலைக்கழகங்களில் தேச விரோத குரல்கள் ஒலித்தபோது அதை கண்டிக்காமல் அதனை ஒரு சாதிய ஆதரவு குரல் கொடுத்த திருமாவளவன் மற்றும் இடதுசாரி தலைவர்கள் இனைந்த மக்கள் நல கூட்டணி கருத்தாக திருமாவளவன் பேச்சை எடுத்துக்கொள்ளலாம?
தேச விரோத கருத்துக்களை சாதிய சாயம் பூசி, மோடி அவர்களின் அரசுக்கு எதிராக திசை திருப்பும் கூட்டணிதான் திருமாவளவன் - இடதுசாரிகளின் மக்கள் நல கூட்டணி என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இதனால் மக்கள் நல கூட்டணி தமிழகத்தில் குழபங்களை ஏற்படுத்த உதவுமே தவிர மக்களின் நலம் காக்க உதவாது என்பதனை திருமாவளவன் - வைகோ போன்றவர்களின் சமீபகால பேச்சுக்களும், நடவடிக்கைகளும் உணர்த்துகின்றது” என்றார்.