ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், சட்ட திட்டங்கள் குறித்து இணையவழிக் கருத்தரங்கம்: தமிழக அரசு அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்ட திட்டங்களும் குறித்து இணையவழிக் கருத்தரங்கம் வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 06) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்ட திட்டங்களும் குறித்த இணையவழிக் கருத்தரங்கம் பற்றிய 3 நாட்கள் (அரை நாள்) பயிற்சியை வரும் 11.10.2021 தேதி முதல் 13.10.2021-ம் தேதி வரை (மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் (EDII) நடத்த உள்ளது.

உலக மயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புகள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நியச் செலாவணியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி - இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும், அவற்றைப் பெறும் முறைகளைப் பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். முன்பதிவு அவசியம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்:

முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032

தொலைபேசி எண்கள்: 8668102600, 9444557654, 044-22252081/22252082

வலைதளம்: www.editn.in".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in