

தொழிலாளர்கள் நலன் கருதி வருங்கால வைப்பு நிதிக்கு (இ.பி.எப்) வரிவிதிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போது இ.பி.எப். கணக்கில் இருந்து ஒரு குறிப் பிட்ட தொகையை மருத்துவ செலவுக்காகவும், வீடு வாங்கவும் பயன்படுத்த வழிவகை செய்யப் பட்டிருக்கிறது. இந்நிலையில், இ.பி.எப். நிதியில் இருந்து பணத்தை திரும்பப் பெறும்போது 60 சதவீத தொகைக்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதிமுதல் வரி செலுத்த வேண்டும் என்று பொது பட்ஜெட்டில் அறிவித்திருப்பது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.
தொழிலாளர்கள் தங்களின் வருமானத்துக்கு ஏற்கனவே வரி செலுத்தி வரும் சூழலில் அவர்கள் தங்கள் வருங்காலத்துக்காக சேமிக்கின்ற தொகைக்கும் வரிவிதிப்பு என்பது அவர்களுக்கு ஓய்வுகாலத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களில் லட்சக்கணக்கானவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
நாடாளுமன்றத்தில் பாஜகவின் கூட்டணியில் அங்கiம் வகிக்கும் கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபடக்கூடாது என குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் வரிவி திப்பை எதிர்க்கின்றன. எனவே, தொழிலாளர்கள் நலன் கருதி இ.பி.எப்.க்கு வரிவிதிக்கும் போக்கை கைவிட வேண்டும்
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது