இரும்பு வியாபாரி வீட்டில் 131 பவுன் கொள்ளை

இரும்பு வியாபாரி வீட்டில் 131 பவுன் கொள்ளை
Updated on
1 min read

கோவை மணியகாரன்பாளையம், வேலவன் நகரைச் சேர்ந்தவர் தினகரன்(44). இவர், கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இரும்புக்கடை வைத்துள்ளார். கடந்த 3-ம் தேதி மாலை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றவர், நேற்று அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பியபோது, உள்ளே பொருட்கள் கலைந்து கிடந்தன. வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. லாக்கர் கதவு திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 131 பவுன் நகைகளை காணவில்லை. அதே லாக்கரில் மற்றொரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை அப்படியே இருந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தினகரன் புகார் அளித்தார்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகைப் பிரிவினர் தடயங்களை சேகரித்தனர். போலீஸார் கூறும்போது, “மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை வேறு பகுதியை நோக்கி திருப்பி வைத்துள்ளனர். முன்பக்க கதவை உடைத்தால் வெளியே தெரிந்துவிடும் என்பதால், மாடியில் உள்ள கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர். மோப்ப நாய் மூலம் கண்டறிந்துவிடக்கூடாது என்பதற்காக, வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிஉள்ளனர்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in