Published : 06 Oct 2021 03:11 AM
Last Updated : 06 Oct 2021 03:11 AM

வேளாண் திருத்த சட்டத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம்: திருப்பூரில் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், முதல்வர், பிரதமர் என தொடர்ந்து 20 ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை விளக்கி, தொடர் ஓவியம் திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று வரையப்பட்டது.

இதனை பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமானவானதி சீனிவாசன் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: உத்தரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் படுகொலை குறித்துஉரிய விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என, அந்த மாநில முதலமைச்சர் யோகிஆதித்யநாத் தெரிவித்துள்ளார். வேளாண் திருத்த சட்டத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால்,காங்கிரஸ் கட்சியை வளர்த்துஎடுக்க முயற்சிக்கிறது. வேளாண் சட்டம் மூலம் விவசாயிகள் வாழ்க்கை உயர்ந்து விடும் என்ற எண்ணத்தில், காங்கிரஸ் கட்சி அதனை தடுக்க முயல்கிறது. என்றார். தொடர்ந்து மோடியின் ஓவியத்தை பார்வையிட்டவர், பின்னர் அங்கு கும்மி அடித்துஆடிக்கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து கும்மி ஆடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தார்.

மாலையில், வானதி சீனிவாசன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். கோவை தெற்கு தொகுதி மக்கள் அளித்த மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை சந்தித்து மனுவாக அளித்தார்.

அதன் பின்னர், வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘புலியகுளம் பகுதியில் உள்ள ரேசன் கடை பிரச்சினை, முதியோர் உதவி தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு உடனடியாக கிடைக்கபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரிடம் மனுவாக அளித்துள்ளேன். பாஜகஆட்சியில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கான ஊதியம்உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஊதியத் தொகை நேரடியாகஅவர்களது வங்கி கணக்கில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது,’’ என்றார். இதைத் தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக, அவர், மாநகராட்சிஆணையரிடமும் மனு அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x