தங்கம் பவுனுக்கு ரூ.168 குறைவு

தங்கம் பவுனுக்கு ரூ.168 குறைவு
Updated on
1 min read

சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளதால், சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.21 ஆயிரத்து 496க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. இதற்கிடையே, சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று சிறிய அளவுக்கு குறைந்திருந்தது. இதனால், சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.21 ஆயிரத்து 496க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 687க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 708க்கு விற்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in