

மார்ச் 9-ம் தேதி நடைபெறும் தனது தந்தையின் 16-வது நாள் சடங்குகளுக்காக நளினிக்கு ஒருநாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் தண்டனைக்காலத்தை கழித்து வரும் நளினி தனது தந்தையின் சடங்குக்காக 3 நாள் விடுப்பு கேட்டு மனு செய்திருந்தார். அதாவது 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பரோலில் விடுவிக்க கடந்த 2-ம் தேதி சிறைக்காவலரிடம் மனு அளித்திருந்தார்.
ஆனால் அந்த மனு பரிசீலிக்கப்படாமல் இருந்தையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த மனு மீது நீதிபதி உத்தரவிடும் போது மார்ச் 9-ம் தேதி ஒருநாள் பரோலில் செல்ல அனுமதி அளித்தார்.
3 நாட்கள் பரோல் அளிக்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.