சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 6 பேரை இடமாற்றம் செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 6 பேரை இடமாற்றம் செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு
Updated on
1 min read

சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 6 பேரை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், அக்கட்சி யின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன், துணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், தலைமை நிலைய வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆகியோர் நேற்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து இரு மனுக்கள் அளித்தனர்.

முதல் மனுவில், தேர்தல் நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்றால் நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் வி.சம்பத், திருப்பூர் டிஆர்ஓ பிரசன்ன ராமசாமி, ஈரோடு டிஆர்ஓ ஆர்.சதீஷ் ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில், சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத், மழையின் போது, ‘முதல்வரின் அறிவிப்பால் மழை பெய்தது’ என தெரி வித்ததை குறிப்பிட்டு மாற்றக் கோரியுள்ளனர்.

மற்றொரு மனுவில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின், அரசு கேபிள் டிவி நிறுவன சேனலில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் தொடர்ந்து காட்டப்படுகிறது. தமிழக அரசின் நிகழ்ச்சிகள் ஒளி பரப்பப்படுகின்றன. அரசை விமர்சிக்கும் தொலைக்காட்சி களின் ஒளிபரப்புகளின் சப்தம் குறைக்கப்படுகிறது. எதிர்க்கட்சி களின் டிவி சேனல்கள் அரசு கேபிளில் ஒளிபரப்பப்படுவ தில்லை. இது தேர்தல் விதிகளை மீறுவதுடன், அடிப்படை உரிமை களை பறிப்பதாகும். எனவே, அரசு கேபிள்டிவி மேலாண் இயக்குநர் குமரகுருபரனை இடமாற்றம் செய்ய வேண்டும். கேபிள் டிவி நிறுவன தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன், அரசு கேபிள் டிவி நிறுவன பணிகளில் தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in