

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா தனித்து களம் இறங்காது என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் கட்சியினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொதுமக்கள், வியாபாரிகள் தொழில்ரீதியாகவோ, விழாக்களுக்கு பொருள் வாங்க செல்லும்போதோ, சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் கெடுபிடி காட்டக் கூடாது. தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்துகளை அறிந்து வருகிறேன். மார்ச் 2-வது வாரத்தில் சுற்றுப்பயணம் முடித்தவுடன், கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். மக்கள் விரும்பும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம். தனித்து போட்டியிடவே மாட்டோம். அதிக தொண்டர்கள் உள்ள கட்சியாக தமாகா உள்ளது. ஊடகங்களில் வரும் கருத்து கணிப்புகள் செயற்கையானவை. அதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறேன் என்றார்.