

மதுரையில் அமைக்கத் திட்டமிட்டி ருந்த பிளாஸ்டிக் சாலை திட்டம் கைவிடப்பட்டதால் பிளாஸ்டிக் மறுசுழற்சி, கண்காணிப்பு இன்றி பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித் துள்ளது. அவை ஒட்டுமொத்தமாக வைகை ஆற்றில் குப்பையாக சேருவதால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் கரோனாவுக்கு முன்பு வரை தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தினமும் டன் கணக் கில் பறிமுதல் செய்யப்பட்டு, அதை பயன்படுத்திய நிறுவனங் களுக்கு அபராதமும் விதிக்கப் பட்டது. பறிமுதல் செய்த பிளாஸ்டிக்கை கொண்டு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. கரோனா பரவலால் மாநகராட்சி நிர்வாகம், பிளாஸ்டிக் சாலை அமைக்கும் நடவடிக்கையில் பின் வாங்கியது. மேலும், பிளாஸ்டிக் கண்காணிப்பையும் மாநகராட்சி கைவிட்டதால், தற்போது கடைகள், திருமண மண் டபங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. மழைக்காலங்களில் கால்வாய்கள் வழியாக வைகை ஆற்றை இந்த பிளாஸ்டிக்குகள் சென்றடை கின்றன.
இது தவிர வைகை ஆற்றி லும் நேரடியாக பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. மாநகராட்சியும் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை தொடர்ந்து மேற்கொள்ளவில்லை.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பிளாஸ்டிக் சாலைகள் உட்பட மொத்தம் 65 புதிய சாலைகள் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.19.94 கோடியில் திட்டமிடப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கரோனாவால் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெறும் பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து மட்டும் சாலைகளை போட முடி யாது. ஜல்லி, தார் போன்ற மற்ற மூலப்பொருட்களும் தேவைப் படுகின்றன. மீண்டும் பிளாஸ்டிக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றனர்.