தருமபுரியில் தேர்தல் விதிமீறல்: அமைச்சர், எம்எல்ஏ உட்பட 100 பேர் மீது வழக்கு

தருமபுரியில் தேர்தல் விதிமீறல்: அமைச்சர், எம்எல்ஏ உட்பட 100 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

தருமபுரியில் தேர்தல் விதிகளை மீறி ஊர்வலம் சென்றதாக அதிமுக வைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், பாலக் கோடு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழகன் உட்பட 100 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளராக பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.அன் பழகன் சமீபத்தில் நியமிக்கப் பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி, தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றார்.

முன்னதாக, திருப்பத்தூர் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க கே.பி.அன்பழகன், அமைச்சர் பழனியப்பன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சென்றனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர், பெரியார் சிலையிலி ருந்து வாகனங்களில் ஊர்வல மாக சென்று 4 முனை சந்திப்பு சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து விட்டு கட்சி அலுவலகத்துக்குச் சென்றனர். இதனால் தருமபுரி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே தேர்தல் விதி முறைகளை மீறியதாக, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், தலைவர் களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஊர்வலம், கட்சி கொடிகளை பயன்படுத்தி யது உள்ளிட்ட தேர்தல் விதி முறைகளை மீறி உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அமைச்சர் பழனியப்பன், கே.பி.அன்பழகன் எம்எல்ஏ உட்பட 100 பேர் மீது 3 பிரிவுகளில் நகர காவல் உதவி ஆய்வாளர் கிரிஜாராணி வழக்கு பதிவு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in