

தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் கூடுதல் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித் துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் பிரச் சாரத்துக்காக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு வந்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வாணியம்பாடியில் கஞ்சா கடத்தல் கும்பல் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த சமூக ஆர்வலர் வசீம்அக்ரம் படுகொலை செய்யப்பட்டார். அவ ருடைய குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் போதை தடுப்பு பிரிவு காவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. கூடுதலாக காவலர்களை பணியமர்த்த வேண்டும். தற்போது, ரவுடிகளை ஒழிப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவின் அடிப்படையில் தமிழக காவல் துறை தமிழ்நாடு முழுவதும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரவுடியிசத்தை ஒழிப்பதைப்போல அவர்கள் பயன்படுத்தக்கூடிய கத்திகளை தயாரிக்க கூடியவர்களையும் கண்காணித்து கைது செய்ய வேண்டும்.
தற்போது, குறுவை சாகுபடி நடைபெற்று விவசாயிகள் தங் களுடைய நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல தயாராக இருக்கிறார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் புதிய மின் ஆளுகை முறையில் விவசாயிகள் பதிவு செய்து அந்த பதிவின் அடிப் படையில் வரக்கூடிய தகவல்களை பொருத்து தங்களுடைய நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
அனைத்தும் மின் ஆளுகைக்கு உட்படுத்தப்படுவது வரவேற் கத்தக்கது. ஆனால், குறுகிய காலத்தில் இந்த மின் ஆளுகை முறை கொண்டு வருவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, மின் ஆளுகை முறையில் கொள்முதல் செய்யும் நடைமுறையை தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும்.
பட்ஜெட் கூட்டத்தொடரில், வக்பு வாரிய சொத்துக்களை பாது காப்பதற்காக சொத்தை விற்பனை செய்வதற்கான தடையில்லா சான்றிதழை வழங்கக் கூடிய முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
அதன்படி, தமிழக முதல்வர் உத்தரவின் அடிப்படையில் வக்பு வாரிய சொத்துக்களை விற்பனை செய்வதற்காக வக்பு வாரிய அதிகாரிகள் தடையில்லா சான்று வழங்கும் நடைமுறையை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான் மையினர் துறை அரசு முதன்மை செயலாளர் ரத்து செய்து மேற் கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது.
வக்பு வாரிய சொத்துக்களை யாராவது பதிவு செய்ய வந்தால் அதனை பதிவு செய்ய ஏற்றுக் கொள்ளக் கூடாது என பதிவுத்துறை தலைவருக்கு துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். இது வரவேற் கத்தக்கது’’ என்றார்.