நாட்டின் சிறந்த முதல்வர்: ஸ்டாலினைச் சந்தித்த குலாம் நபி ஆசாத் புகழாரம்

நாட்டின் சிறந்த முதல்வர்: ஸ்டாலினைச் சந்தித்த குலாம் நபி ஆசாத் புகழாரம்
Updated on
1 min read

தந்தை போலவே மகன் இருப்பதாகவும், நாட்டின் சிறந்த முதல்வர் ஸ்டாலின் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழாரம் சூட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். அவர் மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மக்களவை எம்.பி.யும், திமுக மகளிரணித் தலைவருமான கனிமொழி, எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தமிழக முதல்வரைச் சந்தித்த குலாம் நபி ஆசாத், ''நாட்டின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றன. நாளொன்றுக்கு முதல்வர் ஸ்டாலின் 18 முதல் 19 மணி நேரம் உழைக்கிறார். தந்தை கருணாநிதி போலவே மகனும் இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in