கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் விரக்தி: சிதம்பரம் நந்தனார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் விரக்தி: சிதம்பரம் நந்தனார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை
Updated on
1 min read

சிதம்பரம் நந்தனார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த பிளஸ் 2 மாணவி அக்‌ஷயா என்பவர் சனிக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நடந்து முடிந்த கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் அக்ஷயா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயலட்சுமி விடுதி மாணவியரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன்-செல்வி தம்பதியினருக்கு 4 மகள்கள். இவரது மகள்களில் அக்‌ஷயா மற்றும் அகிலா ஆகிய இருவரும் சிதம்பரம் நந்தனார் பள்ளி விடுதியில் தங்கி அப்பள்ளியிலேயே அகிலா 9-ம் வகுப்பும், அக்‌ஷயா பிளஸ் 2 படித்துவந்தனர்.

இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டவந்த அக்‌ஷயா கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாக சக மாணவியரிடம் கூறி வந்ததாகவும், எனவே மதிப்பெண் குறையக்கூடும் என கூறி சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென விடுதி அறையில் தூக்கில் தொங்கியுள்ளார். இதுகுறித்து சக மாணவியர் விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சிதம்பரம் நகர போலீஸார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து மாணவி இருந்தது தொடர்பாக விடுதிக்குச் சென்ற சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, அறையில் தங்கியிருந்த சக மாணவியரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in