மயானக்கொள்ளையில் அலகு கம்பி குத்தி இளைஞர் உயிரிழப்பு

மயானக்கொள்ளையில் அலகு கம்பி குத்தி இளைஞர் உயிரிழப்பு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்ட ணத்தில் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை தேர்த் திருவிழா நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காவேரிப் பட்டணம் அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்த துரை மகன் சந்துரு (20) என்பவர், நண்பர்களுடன் அங்காளம் மன் கோயிலுக்கு சென்றிருந்தார்.

பக்தர்கள் அலகு குத்தியபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய சந்துரு மீது, பக்தர் ஒருவரின் அலகுக் கம்பி பாய்ந் தது. இதில், மயக்கமடைந்த சந்துரு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். காவேரிப்பட்டணம் போலீஸார் விசாரிக் கின்றனர். உயிரிழந்த சந்துருவின் கண்களை தானமாக வழங்க பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து, பண்ணந்தூர் அரிமா சங்க நிர்வாகிகள், இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தினர் உதவியுடன், பெங்களூரு நாராயணா நேத் ராலயா கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரிடம், சந்துருவின் கண்களை தானமாக பெற்றோர் வழங்கினர். மீளாத துயரத்திலும், மகனின் கண்களை தானமாக வழங்கிய பெற்றோரைப் பார்த்து மக்கள் நெகிழ்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in