Published : 03 Oct 2021 03:11 AM
Last Updated : 03 Oct 2021 03:11 AM

சென்னை வர்த்தக மையத்தில் ‘இந்து தமிழ் திசை’யின் வீட்டு வசதி கண்காட்சி: கனவு இல்லத்தை தேர்வு செய்ய அரிய வாய்ப்பு

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘தமிழ்நாடு பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2021’ எனும் 2 நாள் வீட்டு வசதி கண்காட்சி நேற்று தொடங்கியது. இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்த 'கிரெடாய்' தமிழ்நாடு பிரிவு தலைவர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பாரத ஸ்டேட் வங்கி சென்னை வட்ட தலைமைப் பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா, கலைஞர் செய்தி தொலைக்காட்சி மூத்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆர்.சுமையா கவுசர் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

பொதுமக்கள் வீடு வாங்கும் தங்களது கனவை ஒரே இடத்தில் நனவாக்கும் விதமாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘தமிழ்நாடு பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2021’ என்ற வீட்டு வசதி கண்காட்சி அமைந்துள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘தமிழ்நாடு பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2021’ எனும் இரண்டு நாள் வீட்டு வசதி கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இக்கண்காட்சியை 'கிரெடாய்' (இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டு கூட்டமைப்பு) அமைப்பின் தமிழ்நாடு பிரிவு தலைவர் சுரேஷ் கிருஷ்ணா தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 21 கட்டுமான நிறுவனங்கள் 26 ஸ்டால்களை அமைத்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி உட்பட 4 வங்கிகளின் ஸ்டால்களும் அமைந்துள்ளன.

இங்கு பட்ஜெட் வீடுகள், சொகுசு வில்லாக்கள், வரிசை வீடுகள், அடுக்குமாடி வீடுகள் உள்ளிட்ட அனைத்தையும் பொதுமக்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப ஒரே இடத்தில் தேர்வு செய்யலாம். வீட்டு மனையையோ அல்லது வீடுகளையோ பார்வையிட விரும்பினால் நேரடியாகவும் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த கண்காட்சியில் வீடு புக் செய்பவர்களுக்கு சலுகை உண்டு.

இக்கண்காட்சி குறித்து கிரெடாய் தமிழ்நாடு பிரிவு தலைவர் சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது, “கரோனாவால் வீட்டில் இருந்து அனைவரும் தங்களது அலுவலகப் பணியைச் செய்வதால், வீட்டின் அவசியத்தை அறிந்துள்ளனர். வீடு இல்லாதவர்கள் புதிய வீடு வாங்கவும், சிறிய வீடு வைத்திருப்பவர்கள் பெரிய வீடு வாங்கவும் முன்வந்துள்ளனர். இந்த நேரத்தில் வீட்டு வசதி கண்காட்சி நடத்த முடியுமா என எண்ணினோம். இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் துணிச்சலாக முன்வந்து இந்த கண்காட்சியை நடத்துவது பாராட்டுக்குரியது” என்றார்.

கலைஞர் செய்தி தொலைக்காட்சியின் மூத்த நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆர்.சுமையா கவுசர் பேசும்போது, “நமக்கென சொந்த வீடு வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் வந்துள்ளது. இந்த கண்காட்சியில் வீடு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உடனடி பதில் கிடைக்கும்” என்றார்.

பாரத ஸ்டேட் வங்கி சென்னை வட்ட தலைமைப் பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா பேசும் போது, “கரோனா காலத்துக்கு பிறகு நடத்தப்படும் முதல் வீட்டு வசதி கண்காட்சி இது. வங்கி வரலாற்றிலே இல்லாத அளவுக்கு வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடனுக்கு 6.70 சதவீதம் வட்டி வசூலிக்கிறது” என்றார்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கள பொது மேலாளர் எஸ்.அன்னபூர்ணா, ஐடிபிஐ வங்கி டிஜிஎம் செல்வ பிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சி இன்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x