Published : 03 Oct 2021 03:12 AM
Last Updated : 03 Oct 2021 03:12 AM

பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் ஆதார் கார்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதி: பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிய முதல்வர்

மதுரை அருகே பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் ஆதார் கார்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே அனு மதிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் கிராம மக்களின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உட னடியாக நிறைவேற்றினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை அருகே பாப்பாபட்டி கிராம பஞ் சாயத்தில் நடந்த கிராமசபைக் கூட் டத்தில் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் கிராம மக்களிடம் ஆதார் கார்டு பெற்று, கூட்டம் நடந்த வளாகத் தினுள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

கிராமசபைக் கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த மக்கள், அந்த வளாகத்தைவிட்டு மற் றொரு பகுதியில் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்தனர். கூட்டம் நடந்த வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும், தேனி பிரதான சாலை யில் உள்ள வாலாந்தூர் கிராமத்தில் இருந்து பாப்பாபட்டி கிராமம் வரை 8 கி.மீ. தொலைவுக்கு வழிநெடுகிலும் துப்பாக்கி ஏந்திய மதுரை, விருதுநகர், தேனி மாவட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று காலை முதல் பாப் பாபட்டிக்குள் வெளியாட்கள் யாரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத் துக்கு இடையே நேற்று காலை 11.30 மணிக்கு கிராமசபைக் கூட்டம் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் முருகானந்தம் பேசு கையில், முதல்வர் எங்கள் பஞ்சாயத்து கிராமங்களுக்கு அனைத்து நலத்திட்ட உதவி களையும் வழங்கி முன்மாதிரி கிராம பஞ்சாயத்தாக மாற்ற வேண் டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதன்பிறகு, மாவட்ட நிர்வாகத் தால் முன்கூட்டியே தேர்வு செய்து கூட்டத்தில் பேச அனுமதிக்கப்பட்ட 3 பெண்கள், 3 ஆண்கள் மட்டும் பேசினர். கிராமசபைக் கூட்டம் தொடங்கியதும் ஸ்டாலின், பெயர் கொடுத்தவர்கள் மட்டுமே பேச வேண்டும், மற்றவர்கள் எழுந்து பேசக்கூடாது என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேச அனுமதிக்கப்பட்டவர்கள் கூறி யதாவது:

எங்கள் பஞ்சாயத்து கிரா மங்கள் வளர்ச்சி அடையாமல் உள்ளன. இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. 58-ம் கிராமக் கால்வாய் திட்டத்தில் வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து எங்கள் கிராமங்களில் உள்ள கண்மாய் களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் கிராமங்களுக்கு ஒரு வழிச்சாலை மட்டுமே உள்ளது. அதனை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும். மாணவர்கள் விளையாட, உடற்பயிற்சி செய்ய மைதானம் இருந்தால் ஆண்டுக்கு 20 பேர் எங்கள் கிராமங்களில் இருந்து காவல்துறையிலும், ராணு வத்திலும் சேர்வர் என்றனர்.

அதன்பிறகு கரோனா காலத் தில் அரசு வழங்கிய ரூ.4 ஆயிரம் கிடைத்ததா? என்று கேட்ட முதல்வர், குறைகள் இருந்தாலும் சொல்லலாம் என்றார்.

இலவச பஸ் பயணம்

அதற்கு கூட்டத்தில் பங் கேற்றவர்கள் கரோனா நிவாரணத் தொகை கிடைத்தது, ஆனால், மதுரைக்குச் செல்லும் நகர் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் பெறுவதாக புகார் செய்தனர். அதற்கு ஸ்டாலின், இன்று முதல் மதுரைக்கு செல்லும் பெண்களுக்குக் கட்டணம் பெற மாட்டார்கள் என அறிவிக்கிறேன் என்றார்.

நிறைவாகப் பேசிய முதல்வர், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாப்பாபட்டி கிராமத்தில் ரூ.23 லட்சத்து 57 ஆயிரத்தில் பஞ் சாயத்து மன்ற அலுவலகம் கட் டப்படும்.

மகாதேவனப்பட்டி கிராமத்தில் ரூ.10 லட்சத்து 93 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மையம் அமைக்கப்படும்.

பாப்பாபட்டி கிராமத்தில் ரூ.14 லட்சத்து 53 ஆயிரத்தில் ரேஷன் கடை அமைக்கப்படும். பாப்பாபட்டி, மகாதேவன்பட்டி, பேயன்பட்டி மற்றும் கரையான்பட்டியில் உள்ள மயானங்களில் ரூ.45 லட்சத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப் படும். கரையான்பட்டி கிராமத்தில் ரூ.4 லட்சத்தில் கதிரடிக்கும் களம் அமைக்கப்படும். கனிம வள நிதி திட்டத்தில் கல்லுப்பட்டி காலனியில் தெருவிளக்கு வசதி செய்து தரப்படும். பேயப்பட்டி, மகாதேவன்பட்டி கிராமங்களில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தில் கூடுதல் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படும்.

பாப்பாபட்டியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படும். பாப்பாபட்டி, கல்லுப்பட்டி காலனிக்கு ரூ.25 லட்சத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பொதுமக்கள் வைத்த கோரிக் கைகளில் பலவற்றை உடனே நிறைவேற்றுவதாக முதல்வர் அறிவித்த நிலையில், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த 58 கிராமப் பாசனக் கால்வாய் திட்டத்தில் இந்த கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டுவர எந்த உறுதிமொழியும் வழங்காமல் சென்றார். அது கூட்டத்தில் பங்கேற்ற விவசா யிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

உதயசந்திரனை பாராட்டிய முதல்வர்

கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் , உதயசந்திரன் பெயரை குறிப்பிடும் போதெல்லாம், கிராம மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

ஸ்டாலின் பேசுகையில், இந்த கிராம பஞ்சாயத்தில் தேர்தலை நடத்த 2006-ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன்தான் பெரும் முயற்சி மேற்கொண்டார். உங்கள் உள்ளங்களை கவர்ந்த, உங்களால் மதிக்கப்பட்ட உதயசந்திரன் தற்போது எனது தனிச் செயலராக இருக்கிறார். அதுபோல மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மற்ற அதிகாரிகள் பாப்பாபட்டி கிராமசபைக் கூட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளனர் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x