ம.ந. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகம்: வைகோ மகிழ்ச்சி

ம.ந. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகம்:  வைகோ மகிழ்ச்சி
Updated on
1 min read

மக்கள் நலக் கூட்டணியின் தொகுதி பங்கீட்டுக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த 4 கட்சிகளின் தலைவர்களும் சென்னையில் நேற்று முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர். மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று முதலில் தெரி விக்கப்பட்டது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை வைகோ இல்லத் தில் நேற்று ரகசியமாக நடத்தப் பட்டது.

இதில் மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகிய 4 பேரும் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய வைகோ, ‘‘மக்கள் நலக் கூட்டணியின் முதல்கட்ட பேச்சு வார்த்தை சுமுகமான முறையில் நடந்தது. எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுக்கிறோம். தேவைப்பட்டால் அவரை சந் தித்து பேசுவோம்’’ என்றார்.

தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் கேட்டபோது, ‘‘முதல்கட்ட பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. 4-கட்ட பிரச்சார பயணங்களை முடித் துள்ளோம். அடுத்தகட்ட பிரச்சாரப் பயணம் தொடர்பாகவும் விவாதித் தோம்’’ என்றார்.

கூட்டணியில் உள்ள 4 கட்சி களும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளின் உத்தேச பட்டியலை கொடுத்ததாக கூறப் படுகிறது. மேலும், கடந்த வாரத்தில் நடந்த இந்திய கம்யூ னிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலக் குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவு கள் குறித்தும் விவாதிக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in