சென்னை காவல்துறை மூன்றாகப் பிரிப்பு; தாம்பரம், ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

ரவி ஐபிஎஸ்: கோப்புப்படம்
ரவி ஐபிஎஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை மாநகரக் காவல்துறை மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம், ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (அக். 01) வெளியிட்ட அறிவிப்பு:

"1. நிர்வாகம் (சென்னை) ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் எம்.ரவி, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. அமலாக்கப் பிரிவு (சென்னை) ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் சந்தீப் ராய் ரத்தோர், ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. பொருளாதாரக் குற்றத் தடுப்புப்பிரிவு (சென்னை) ஐஜியாகப் பதவி வகித்து வரும் அபின் தினேஷ் மோதக், அடுத்த உத்தரவு வரும் வரை அப்பிரிவின் ஏடிஜிபி பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in