Published : 01 Oct 2021 03:17 AM
Last Updated : 01 Oct 2021 03:17 AM

நேபாளத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற பூங்கோதை

சென்னை

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பொக்ராவில் அனைத்து விளையாட்டுகள் தெற்காசிய கூட்டமைப்பு சார்பில் போட்டிகள் நடைபெற்றது. இதில்இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 130 பேர் கொண்ட அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றது.

இதில் மகளிருக்கான 5 ஆயிரம்மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர்பட்டணத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், ராமுத்தாய் ஆகியோரது மகள் பூங்கோதை தங்கப் பதக்கம் வென்றார். பந்தய இலக்கை அவர்24 நிமிடங்களில் கடந்து அசத்தினார். பூங்கோதை எஸ்என்எம்வி கல்லூரியில் பிஎஸ்சி உயிரி தொழில்நுட்பவியல் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார்.

அதேவேளையில் ஆடவருக்கான வட்டு எறிதலில் இதே கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன் 40 மீட்டர்தூரம் எறிந்து தங்கப் பதக்கம்வென்றார். தர்ஷன் வெங்கடலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கோவை பட்டணத்தில் உள்ள சுப்பிரமணிய பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x