விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சரை தடுத்து நிறுத்திய அதிகாரி

விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சரை தடுத்து நிறுத்திய அதிகாரி
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பாதுகாப்பு அதிகாரி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தூத்துக்குடி செல்வதற்காக நேற்று காலை சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி, ‘‘கையில் 2 மடிக்கணினி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை’’என்று கூறி, அமைச்சரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தான் தமிழக நிதி அமைச்சர் என்பதை தெரிவித்த அவர், இந்தியிலும் இதைவிளக்கியுள்ளார். ஆனாலும், அந்த அதிகாரி விடாப்பிடியாக இருந்ததால், வாக்குவாதம் அதிகரித்து, பரபரப்பான சூழல் உருவானது.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விமான நிலைய உயர் அதிகாரிகள், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கோரினர். உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு பிறகு, அமைச்சரை தடுத்து நிறுத்திய அதிகாரியும் அவரிடம் மன்னிப்பு கோரினார்.பின்னர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 மடிக்கணினியையும் உடன் எடுத்துச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in