தமிழகம்
இளவெயினிக்கு நினைவு மண்டபம்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்
பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினிக்கு மதுரையில் நூலகம், முழு உருவச் சிலையுடன் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சங்க காலத்தில் குறவர் குடியில் பெண்ணாக பிறந்து இளமைக் காலத்திலேயே புலமை பெற்று பெரும் புலவராய் விளங்கியவர் பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் குறமகள் இளவெயினிக்கு நூலகத்துடன் கூடிய முழு உருவச்சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை அமைப்பது பொருத்தமாக இருக்கும். முதல்வர் இதை உடனடியாக பரிசீலித்து மதுரையில் நூலகத்துடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
