

தாம்பரம் பொழிச்சலூர் அருகே கவுல் பஜார் பகுதியில் பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதிரித்து பாஜக துணைப் பொதுச் செயலரும், நடிகையுமான குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றன. அதிமுக மற்றும் பாஜகவினர் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பாஜக துணைப் பொதுச் செயலர் குஷ்புவும் இந்தப் பகுதியில் மாவட்ட கவுன்சிலராக போட்டியிடும் சி.கே.சுரேஷ்பாபு மற்றும் அதிமுக, பாஜகவேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் மத்திய அரசுகொண்டு வரும் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைய அந்தக் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளிலும் இருக்க வேண்டும். பாஜக அரசும்,அதிமுக அரசும் பல்வேறு நல்லத்திட்டங்களை கொண்டு வந்தன.
தற்போதுள்ள மாநில அரசு செய்வதாக வாக்குறுதி அளித்தவற்றை நிறைவேற்றவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் ஏமாந்ததுபோல் இந்த முறைஏமாற வேண்டாம் என்றார். இந்தக் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக பொறுப்பாளர் வேதாசுப்பிரமணியம் உடன் இருந்தார்.