10.5 சத இடஒதுக்கீடு என்பது சமூகநீதி பிரச்சினை: அன்புமணி ராமதாஸ் கருத்து

10.5 சத இடஒதுக்கீடு என்பது சமூகநீதி பிரச்சினை: அன்புமணி ராமதாஸ் கருத்து
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியி டும் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை கூட்டேரிப்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் பாமக இளைஞர் சங்கத் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது:

மாற்றம் உள்ளாட்சியிலிருந்து தொடங்கட்டும். 54 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆண்டது போதும். நாம் ஆட்சிக்கு வரவே கட்சி தொடங்கினோம். 42 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் 10.5 சதவீத இட ஒதுக்கீடை பெற்றோம். இனி நாம் ஆள வேண்டும். அந்த தொடக்கம் நம் மாவட் டத்தில் தொடங்கட்டும்.

ஸ்டாலின் முதல்வராக ஆசைப்பட்டார். அவர் ஆசை நிறைவேறிவிட்டது. அடுத்து நம் ஆசை நிறை வேறப் போகிறது. நம் அரசியல் வித்தியாசமான அரசியல். இட ஒதுக்கீடை கொடுத்தது முன் னாள் முதல்வர் பழனிசாமி, அதற்குஉறுதுணையாக இருந்தது முன் னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இதை ஏற்றுக்கொள்கிறோம். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வர பாமக ஆட்சிக்கு வர வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றத்தை விட உள்ளாட்சி முக்கியமானது.

அனைத்து சமூக மக்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்றுபோராடுகிறோம். 10.5% அரசி யல் பிரச்சினையல்ல. இது சமூகநீதி பிரச்சினை. அந்த அடிப் படையில்தான் எல்லோரும் பார்க்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in