தென்மேற்கு பருவ மழை தொடங்கியது

தென்மேற்கு பருவ மழை தொடங்கியது
Updated on
1 min read

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே பெய்யத் தொடங்கிவிட்டது. முதல்நாளில் அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

கேரளாவில் தொடங்கியுள்ள இந்த பருவமழை, படிப்படியாக நாடு முழுவதும் பெய்யத் தொடங்கும். கடந்த ஆண்டு 182 மாவட்டங்களில் சராசரியைவிட அதிக மழையும், 264 மாவட்டங்களில் சராசரி மழையும், 176 மாவட்டங்களில் குறைவான மழையும் பெய்தது. இந்த ஆண்டு அனைத்து இடங்களிலும் சராசரியான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவ மழையின்போது, தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் பகுதிகளுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில் மழை குறைவாகவே இருக்கும்.

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in