

கயத்தாறு அகிலாண்டம்மன் கோயில் வளாகப்பகுதியில் பிரதமர்மோடியின் 71-வது பிறந்த நாளைமுன்னிட்டு பாஜக ஊரக நகர வளர்ச்சி பிரிவின் கீழ் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
மாவட்டச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் சையது இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சையது இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக சார்பில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களை திமுக விலை பேசுவதும், மிரட்டுவதும், அவர்களது பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை விதிப்பதும், எங்களை போன்ற தலைவர்கள் பிரச்சாரத்துக்கு செல்லும் போது, அனுமதியில்லை என தடுப்பதும் தொடர்கிறது என்றார்.