ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 44 தமிழக மீனவர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 44 தமிழக மீனவர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
1 min read

ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்ட தமிழக மீனவர்கள் 44 பேருக்கும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐக்கிய அரபு நாட்டில் அஜ்மன் மற்றும் சார்ஜாவில் தனியார் மீன்பிடி நிறுவனங்களுக்கு சொந் தமான மீன்பிடி படகுகளில் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னி யாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 44 மீனவர்கள் ஒப்பந்த தொழி லாளர்களாக பணியாற்றி வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி கடலில் மீன்பிடித்தபோது, வழிதவறி ஈரான் நாட்டு கடல் பகுதிக்குள் சென்றுவிட்டனர். அந்நாட்டு கடலோர காவல் படையினர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழக அரசு சார்பில் ஐக்கிய அரபு நாடு மற்றும் ஈரான் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரி களையும், மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்களின் விடுதலைக்கான சட்ட உதவிகளை அளிக்கும்படி கோரப்பட்டது.

இந்த தொடர் முயற்சிகளின் காரணமாக ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 44 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப் பட்டனர். அவர்கள் 3-ம் தேதி (நேற்று) தமிழகம் திரும்பினர். தமிழக அரசின் செலவில் மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஈரான் சிறையில் அடைக்கப் பட்டிருந்த 44 தமிழக மீனவர் குடும்பங்களின் வறிய நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். இதன்மூலம், விடுதலையான மீனவர்கள் தமிழகத்தில் புதிய வாழ்வை தொடங்க முடியும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in